2020 ல் உலகின் 3 வது பெரிய விமானச் சந்தையாக இந்தியா இருக்கும்- விமானப் போக்குவரத்து சங்கம் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

2020ம் ஆண்டில் உலகின் 3வது பெரிய விமானச் சந்தையாக இந்தியா இருக்கும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்து உள்ளது. 

உலக நாடுகளின் விமான போக்குவரத்து குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2037ம் ஆண்டளவில் விமானம் மூலம் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை 820 கோடியாக இரண்டு மடங்கு உயரும். ஆசியா மற்றும் பசிபிக் வழித்தடங்கள் முன்னோடியாக இருக்கும். 

இதன் காரணமாக 10 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், சீனா 2020ம் ஆண்டில் அமெரிக்காவை விட மிகப்பெரிய ஒற்றைச் சந்தையாக மாறும். இந்தியா 3 வது  இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
தொடர்ந்து இந்தோனேசியாவும், பிரிட்டனும் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 48 கோடியாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உலக விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மூலக்கதை