ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2 ஆண்டில் 360 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜம்மு  காஷ்மீரில் கடந்த 2 ஆண்டில் 360 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் 360 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, சிஆர்பிஎப் தலைவர் ராஜீவ் ராய் பட்னாகர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: தீவிரவாதிகளின் வாழ்நாள் மிகவும் குறைவு.

அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இளம் வயது தீவிர வாதிகளை சரண் அடையுமாறு கோருகிறோம்.

அவர்கள் தீவிரவாத பாதையில் தொடரும் போதுதான் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு 220க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்தாண்டு இதுவரை 142 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.



இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 360க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

மாநில போலீசார், ராணுவத்துடன் இணைந்து சிஆர்பிஎப் வீரர்கள் செயல்படுகின்றனர். கல்வீச்சு தாக்குதல்களின் போது சிஆர்பிஎப் வீரர்கள் பலர் படுகாயம் அடைகின்றனர்.

எனினும், பொதுமக்களின் உயிரிழப்பை தடுப்பதற்காக வீரர்கள் மிகுந்த பொறுமை காக்கின்றனர். தீவிரவாதத்தை தடுக்க ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை