நீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி வருவேன் பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

PARIS TAMIL  PARIS TAMIL
நீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி வருவேன் பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் ‘தஹிஹண்டி’ எனப்படும் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ராம் கதம் பேசினார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- நீங்கள் (இளைஞர்கள்) எந்த ஒரு வேலைக்காகவும் என்னை சந்தித்து பேசலாம். எப்போது வேண்டுமானாலும் என்னை தொலைபேசியில் அழைக்கலாம்.

தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் நூறு சதவீதம் இதில் உதவி செய்வேன். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.என்னுடைய செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள். (தனது செல்போன் எண்ணையும் ராம் கதம் கூட்டத்தில் தெரிவித்தார்).இவ்வாறு அவர் பேசினார்.

ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து உள்ளன. இது தொடர்பாக ராம்கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது, நான் அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரிக்கப்பட்டு உள்ளது  என்றார்.

மூலக்கதை