ம.பி., முதல்வராகிறார் கமல்நாத் ?

தினமலர்  தினமலர்
ம.பி., முதல்வராகிறார் கமல்நாத் ?

புதுடில்லி : மத்திய பிரதேச முதல்வராக காங்., மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று ராஜஸ்தானில் முதல்வர் தேர்வில் அசோக் கெலட் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ம.பி.,யில் பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை என்ற நிலையில் தேர்தலில் காங்., க்கு 114 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆட்சி அமைக்க 2 எம்எல்ஏ.,க்கள் குறைவாக இருந்த நிலையில் காங்.,க்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி (3), சமாஜ்வாதி (1) அறிவித்ததை அடுத்து காங்.,ன் பலம் அதிகரித்தது. காங்., ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் யார் முதல்வர் என்ற குழப்பம் எழுந்தது.
கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர்களின் கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதி முடிவை கட்சியின் தலைவர் ராகுல் இன்று (டிச.,13) முறைப்படி அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. கமல்நாத், தனது கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங், சிந்தியா உள்ளிட்டோருடன் சென்று கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்து ஆட்சி அமைக்க நேற்றை உரிமை கோரி இருந்தார்.
காங்., வெற்றி பெற்ற 3 ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை ராகுலிடம் ஒப்படைப்பதாக நேற்று நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் 3 மாநில முதல்வர்கள் யார் என்பதை ராகுல் இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை