சிலிண்டர் விலை குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

மானிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52-ம், மானியமில்லா எரிவாயு சிலிண்டரின் விலைரூ.133-ம் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளதால், எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. தொடர்ந்து 6 மாதங்களாக உயர்ந்து வந்த எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது தான் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

14.2 கிலோ எடை கொண்ட மானியத்துடன் கூடிய சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.507 ஆகும். மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.942 என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 1ம் தேதி வரி வகை உயர்வு காரணமாக சிலிண்டர் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டது. அடுத்த 8 நாட்களில் 2-வது முறையாக சிலிண்டர் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டது.இந்நிலையில் தற்போது மானியம் மற்றும் மானியமில்லா சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, மும்பையில் ரூ.505.05 ரூபாயாகவும், டெல்லியில் 507.42 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 510.70 ரூபாயாகவும், சென்னையில் 507 ரூபாயாகவும் சிலிண்டர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன

மூலக்கதை