வட மாநிலங்களில் பனிப்பொழிவு: டெல்லியில் 10 ரயில்கள் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
வட மாநிலங்களில் பனிப்பொழிவு: டெல்லியில் 10 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில், அங்கிருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடுமையான குளிரால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

விடிந்து நீண்டநேரமாகியும் பனிமூட்டம் விலகாமல் உள்ளதால் எதிரே வரும் வானங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் விபத்துக்களும் நடக்கின்றன.

பனிமூட்டத்தால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போதிய வெளிச்சம் இல்லாததால், ரயில்கள் புறப்பாடு தாமதமாகின்றன. அந்தவகையில், மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லி வரும் ரயில்கள் தாமதமாவதுடன், இங்கிருந்து புறப்படும் ரயில்களையும் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்க முடிவதில்லை.


10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 19 ரயில்கள் தாமதமாக வந்தடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.



.

மூலக்கதை