சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விகடன்  விகடன்
சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் வீட்டின்  கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பக்தபள்ளி கிராமத்தில் சமீபத்தில் வீடு ஒன்று கட்டப்பட்டது. புதிதாக கட்டிய அந்த வீட்டின் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய, தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை  உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் தொட்டியில் இறந்தவர்களில் அந்த வீட்டின் உரிமையாளரின் சடலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதே பரிசோதனை அறிக்கைக்குப் பின்பே முழுவிபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.

மூலக்கதை