ஈராக்கில் 39 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை அரசு மூடி மறைக்க முயற்சி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: முகநூல் திருட்டை போர்வையாக கொண்டு ஈராக்கில் 39 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை மத்திய அரசு மூடி மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ள விமர்சனத்தில் ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்து இந்திய அரசு மக்களிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை மறைக்கும் தீர்வாக முகநூல் விவரங்களை கசிவுகள் விவகாரத்தில் தொடர்புடைய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் காங்கிரஸிக்கு தொடர்பு உள்ளதாக ஒரு புதிய கதையை பாரதிய ஜனதா அரசு புனைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த தூண்டிலில் ஊடகத்துறையினர் சிக்கிக்கொண்ட விளைவாக ஈராக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் விவகாரம் மக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது என்றும் ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை