அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்

தினமலர்  தினமலர்
அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்

புதுடில்லி: ஏழைகளுக்கு, உயிர் காக்கும் மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக, அனைத்து அரசு பெட்ரோல் பங்க்குகளிலும், மருந்தகங்களை திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்தியில் அமைந்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, ஏழை, எளிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளை மலிவு விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உயிர் காக்கும் மருந்துகளை, மக்கள் எளிதாக வாங்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசு பெட்ரோல் பங்க்குகளிலும், மலிவு விலை
மருந்தகங்களை திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் மருந்து துறையின் கீழ், பெட்ரோல் பங்க்குகளில், 'ஜன் அவ்ஷதி' என்ற பெயரில், மலிவு விலை மருந்தகங்கள் விரைவில் திறக்கப்படும். இங்கு, உயிர் காக்கும் மருந்துகள், மலிவு விலையில் விற்கப்படும். பெட்ரோல் பங்க்குகளில், 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்த கணக்கு எண் மற்றும் ஆதார் கார்டு வழங்கல் மற்றும் வங்கி சேவை போன்ற சேவைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை