புதிய மெட்ரோ ரயில் கொள்கை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினமலர்  தினமலர்
புதிய மெட்ரோ ரயில் கொள்கை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி : மெட்ரோ ரயில் சேவை தொடர்பான புதிய கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.

புதிய கொள்கை:


மெட்ரோ ரயில் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டில், தற்போது, டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை, கொச்சி, மும்பை, ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய நகரங்களில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், புனே, லக்னோ ஆகிய நகரங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே செயல்பட்டு வரும் நகரங்களில், அதை விரிவுபடுத்தும் பணிகளும் நடக்கின்றன.இதனால், மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக, புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல்:


மெட்ரோ ரயில்களுக்கான விதிகள், நிலம் கொள்முதல், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உட்பட, அனைத்து விபரங்களும், இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த கொள்கை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில், இந்த மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை