சத்துணவில் முட்டை ‛கட்'

தினமலர்  தினமலர்
சத்துணவில் முட்டை ‛கட்

சென்னை: முட்டை விலையேற்றம் காரணமாக, பல மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சமூக நலத்துறையை சேர்ந்த சிலர் கூறியதாவது: சத்துணவு திட்டத்துக்கான முட்டைகளை, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒப்பந்தப்படி, ஒரு முட்டை, 4.35 ரூபாய்க்கு வழங்கினர். தற்போது, விலையேற்றத்தால், ஒரு முட்டை, 5.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஒப்பந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவே, பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்வதை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திடீரென நிறுத்தி விட்டன. இதனால், முட்டை வினியோகம் தடைபட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, சமூக நலத்துறை அமைச்சரை தொடர்பு கொண்ட போது, அவருக்கு பதிலாக பேசிய நபர், 'அமைச்சர் ஆய்வுக்காக, காஞ்சிபுரம் சென்றுள்ளார். இரவு தான் வருவார்; எனவே, நாளை பேசுங்கள்' எனக்கூறி, இணைப்பை துண்டித்து விட்டார்.

மூலக்கதை