விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

மும்பை: அபராத தொகை செலுத்த தவறியதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்கு உள்ளிட்டவற்றை முடக்குமாற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்திய பங்கு பரிவா–்த்தனை வாரியம்(செபி) உத்தரவிட்டுள்ளது. இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா தொடங்கிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

மேலும் கிங்பிஷருக்காக வாங்கிய கடனை அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் வெளிநாடுகளில் அவர் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அவர் லண்டன் தப்பினார்.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் அவரது இந்திய சொத்துக்கள் சிலவற்றை விற்பனை செய்ய வங்கிகள் நடவடிக்கை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்குகளை முடக்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகளை கடந்த 2015ம் ஆண்டு விற்பனை செய்ததற்கான விவரங்களை செபியிடம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் சமர்ப்பிக்கவில்லை. இதனால் அப்போது அந்த நிறுவனத்துக்கு ரூ.

15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை மல்லையா இதுவரை செலுத்தவில்லை.

தற்போது வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 18. 5 லட்சம் அவர் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த அபராதத்தை வசூலிக்கும் விதமாக மல்லையாவின் 7 சதவீத பங்குகள் இருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின ்அனைத்து வைப்பு மற்றும் பங்கு பரிவா–்த்தனை கணக்குகளை முடக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

.

மூலக்கதை