ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: ...

ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.  


    இந்நிலையில், தற்போது ஐபோன X வாடிக்கையாளர்களில் சிலருக்கு தங்களது ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.  
  இந்த கோடு ஹார்டுவேர் கோளாறு மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், மின்சார அமைப்புகளில் ஏற்பட்ட பிழைதான் இதற்கு காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
  பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தங்களது பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றனர்.  
  ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் அல்லது ரீஸ்டோர் செய்தாலும் பச்சை கோடு டிஸ்ப்ளேவில் இருந்து மறையவில்லை என கூறப்படுகிறது.  
  இந்த பிரச்சனையை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்தது.

ஐபோன் X ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை