உறங்கிய பயணியை எழுப்ப மறந்த ரயில்வேக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உறங்கிய பயணியை எழுப்ப மறந்த ரயில்வேக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

போபால்: ரயிலில் உறங்கிய பயணியை எழுப்ப மறந்த ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இதன் காரணமாக பொது மக்களுக்கு ஏராளமான சிக்கல்களும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளும் காணப்பட வேண்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கோவை ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மத்திய பிரதேசத்தில் உள்ள பெதுல் நிலையத்தில் மாலை 2 மணிக்கு வக்கீல் கிரீஸ் கார்க் என்பவர் ஏறினார்.

தனது செல்போன் மூலம் ரயில்வேயின் சேவை எண்ணான 139க்கு போன் செய்து மறுநாள் காலை கோடா நிலையத்தை அடைவதற்கு முன்பாக அதிகாலை 1. 40க்கு எழுப்பும்படி பதிவு செய்துள்ளார். இந்த சேவையை அளிப்பதாக மறுமுனையில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நள்ளிரவு என்பதால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கிரீஸ் கார்க் கோடா நிலையம் வந்ததும் தூக்க கலக்கத்தில் அடித்து பிடித்துக் கொண்டு கடைசி நேரத்தில் இறங்கினார்.

இதனால் தான் கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும், அலாரம் சேவையை அளிக்க தவறியதால் தனக்கு ரூ. 20 ஆயிரம் ரயில்வே இழப்பீடு வழங்க வேண்டும் என பெதுல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீரேந்தி பட்டிதார் கடந்த 26ம் தேதி அளித்த உத்தரவில், சேவையை வழங்குவதாக உறுதி அளித்து விட்டு தவறிய ரயில்வே நிர்வாகம் கிரீஸ் கார்குக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் வழக்கு செலவு ரூ. 2 ஆயிரத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

இதை ஒரு மாதத்திற்குள் கிரீசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

.

மூலக்கதை