இரட்டை இலை விவகாரம்:தேர்தல் கமிஷன் முடிவு தவறானது:சுப்பிரமணிய சாமி

தினமலர்  தினமலர்
இரட்டை இலை விவகாரம்:தேர்தல் கமிஷன் முடிவு தவறானது:சுப்பிரமணிய சாமி

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது எழுந்த
புாகரில் தேர்தல் கமிஷன் தவறான முடிவை எடுத்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
அவர் டில்லியில் கூறியதாவது:ஒரு அமைப்புக்கு லஞ்சம் தருவது மற்றும் ஹவாலா பரிவர்த்தனை இரண்டும் தனித்தனி வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக்கூடாது.எது எப்படி இருந்தாலும் என்னுடைய பார்வையில் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்துள்ளது.
தினகரன் உண்மையிலேயே தேர்தல் கமிஷனில் யாருக்காவது லஞ்சம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் என்றால் அது குறித்து தீவிரமாக விசாரித்து சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும்.ஆனால் இது குறித்த போலீசார் விசாரணையின்போது, அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அதற்கான சட்டவிதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப்பிரிவு அந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷனுடன் இணைக்கக் கூடாது.

புரியவில்லை


தினகரன் மற்றும் அவருடைய நண்பர்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால் டில்லி போலீசார் தேர்தல் கமிஷனுக்கும் இந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்தக் கூடாது.என்னால் இன்னும் இந்த வழக்கை முழுதாக புரிந்து கொள்ள முயவில்லை. இது தேர்தல் கமிஷனில் யாருக்கோ லஞ்சம் அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கா?அப்படி என்றால் சசிகலா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் எப்படி முடிவு எடுத்தது? இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராமல் தேர்தல் கமிஷன் எதற்கு முடக்க வேண்டும்? சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருந்தால் இந்த லஞ்ச குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.

மூலக்கதை