மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல்

தினமலர்  தினமலர்
மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல்

திருவனந்தபுரம்: கேரளாவில், மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக, அந்த மாநில டி.ஜி.பி., சென்குமார் கூறிய கருத்துக்களை, முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக் கொண்டுஉள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். கொச்சியில், இம்மாதம், 17ல் நடந்த மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி, கேரளா வந்திருந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், அவரின் வருகையை ஒட்டி பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததாகவும், மாநில போலீஸ் டி.ஜி.பி., சென்குமார் கருத்து தெரிவித்திருந்தார்; இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டி.ஜி.பி., தெரிவித்த கருத்துக்கள் குறித்து, முதல்வர் பினராயி விஜயனிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது, முதல்வர் விஜயன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, கொச்சி வந்த, 17ம் தேதி, அவரின் உயிருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது உண்மையே. இது குறித்து, போலீசார், என்னிடம் தெரிவித்தனர். எனினும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், அசம்பாவிதங்கள் நிகழவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை