தில்லுமுல்லுக்கு வாய்ப்பே இல்லை: ஓட்டு எந்திரம் பாதுகாப்பானது - தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தில்லுமுல்லுக்கு வாய்ப்பே இல்லை: ஓட்டு எந்திரம் பாதுகாப்பானது  தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி- இந்திய நாட்டின் தயாரிப்பான எலெக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள் மிகவும் நம்பகதன்மை மிக்கவை என்றும், மிகவும் பாதுகாப்பானவை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எலெக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள் மீதான நம்பகதன்மை குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த தேர்தல்களில் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு வேலைகள் செய்துதான் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஓட்டு எந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் மூலம் இதுவரை 107 மாநில தேர்தல்களையும், 3 நாடாளுமன்ற தேர்தலையும் சுமூகமாக நடத்தியுள்ளோம். நியாயமான தேர்தல் முடிவுகளை இந்த எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் அளித்துள்ளன.

அதன் மீது தேர்தல் ஆணையத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.

பெரும்பாலான நாடுகளில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் இல்லை.

அமெரிக்காவில் கூட ஓட்டு சீட்டுகள் மூலம்தான் தேர்தல் நடக்கிறது. கனடா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் இன்டர்நெட் மூலம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு நடக்கிறது.

நெட்வொர்க் மூலம் இயங்கும் ஓட்டு இயந்திரங்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் மிகச் சிறப்பானது.

மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது நமது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள். ஓட்டு தகவல் அனைத்தும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன.

மின் இணைப்பு துண்டானாலும், அதில் பதிவான தகவல்களை எளிதில் பெற முடியும். எனவே தில்லுமுல்லுக்கு வாய்ப்பே இல்லை.

இந்தியாவின் தேர்தல் இயந்திரம் 100 மடங்கு பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை