போர் அச்சுறுத்தல் :வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
போர் அச்சுறுத்தல் :வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எச்சரிக்கை

டில்லி: எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில், நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்வகையில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

எளிமையாக்க வேண்டும்


மேலும் அவர் கூறியதாவது: ராணுவத்தில், நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் புகுத்த வேண்டும். ராணுவத்துக்கு தேவையான ஆயுதக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். ராணுவத்துக்கு தேவையான தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் எளிமையாக, குறைவான எடை கொண்டதாக, சுலபமாக பராமரிக்கும் வகையில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் எந்த ஒரு தட்பவெப்ப சூழ்நிலையிலும் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். என்றார்.

மூலக்கதை