ஆர்.கே.நகர் வேட்பு மனுதாக்கல் முடிந்தது

தினமலர்  தினமலர்

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 23) கடைசி நாளாகும். இதில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மார்ச் 25 ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இன்று கடைசி நாள் :


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடக்க உள்ளது. இதில் போட்டியிடுவதற்கு நேற்று வரை திமுக வேட்பாளர் உள்ளிட்ட 54 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற குழப்பம் காரணமாக அதிமுக சார்பில் இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்கியும், அதிமுக கட்சி பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று, ஓபிஎஸ் அணி வேட்பாளரான மதுசூதனன், சசிகலா அணி வேட்பாளரான தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

ஜெ., ஆசியுடன் மனுதாக்கல் :


மனுதாக்கல் செய்வதற்கு முன் ஓபிஎஸ் அணியினர் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஆர்.கே.நகருக்கு சென்ற அவர்கள், பேரணியாக சென்று மனுக்கள் செய்ய உள்ளனர். காலை 10 மணியளவில் மதுசூதனும், 10.30 மணிக்கு தினகரனும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். காலை 11 மணிக்கு மேல் தீபா மனுதாக்கல் செய்ய உள்ளார்.

மூலக்கதை