10 ரூபாய் நாணயம் பயன்படுத்த தடையில்லை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்

பெங்களூரு: 10 ரூபாய் நாணயம் தடைசெய்யவில்லை. வழக்கம் போல் கடைக்காரர்கள், வியாபாரிகள் இந்த விவகாரத்தில் தேவையற்ற பீதி அடைவதை விட்டு பொதுமக்களிடமிருந்து தாராளமாக பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக 10 ரூபாய் நாணயம் போலியாக வெளியாகி உள்ளது. எனவே, இதை ரிசர்வ் வங்கி தடைசெய்துள்ளதாக  பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். அதிலும் குறிப்பிடும்படியாக ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க், காய்கறி, பழக்கடைகள் போன்ற பல்வேறு கடைகளில்  கட்டாயம் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பெற்று  கொள்ளவேண்டும். 10 ரூபாய் நாணய விவகாரத்தில் வியாபாரிகள் பீதி அடைய தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை