உத்தரப் பிரதேசத்தில் 53 தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட தேர்தல்

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. . இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. அலகாபாத், பதேபூர் லலித்பூர் உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 53 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும் 680 வேட்பாளர்களின் தலைவிதியை 1.84 கோடி வாக்காளர்கள் முடிவு செய்கின்றனர். இவர்களில் 84 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். 1032 பேர் மூன்றாம் பாலினர். கடந்த 2012ம் ஆண்டு இந்த 53 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 24 இடங்களில் சமாஜ்வாடி வென்றது. 5 இடங்களில் பாஜ.வும், 15 இடங்களில் சமாஜ்வாடியும், 6 இடங்களில் காங்கிரசும், 3 இடங்களில் இதர கட்சிகளும் வென்றன. உ.பி.யில் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்கள் வரும் 27ம் தேதியும், மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளிலும் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 11ம் தேதி வெளியிடப்படும்.  தேர்தலுக்கு பின் எந்த கூட்டணியும் இல்லைஉத்தரப் பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டப்பேரவை நிலவும், இதனால் தேர்தலுக்குப்பின் பாஜ தலைமை, பகுஜன் சமாஜ் அல்லது பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என சில கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதுகுறித்து வாரணாசியில் நேற்று பேட்டியளித்த பா.ஜ தலைவர் அமித்ஷா, ‘‘தேர்தலுக்குப்பின் பிற கட்சிகளுடன் கூட்டணி என்ற ேகள்விக்கே இடமில்லை. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவாவில் பா.ஜ தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பஞ்சாப்பில் மும்முனை போட்டி நிலவுவதால் அங்கு தேர்தல் வெற்றியை கணிப்பது கடினம்’’ என்றார். இதற்கிடையே, லக்னோவில் நேற்று பேட்டியளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ‘‘பிரதமர் நரேந்திர மோடி ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர். உ.பி.யில் கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ அலை வீசியது. இப்போது அதைவிட வலுவாக வீசுவதை காண முடிகிறது’’ என்றார். இதற்கிடையே உபி தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கடிதம் மூலம் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை