சாகித்ய அகாடமி விருது பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன்

தினகரன்  தினகரன்

டெல்லி  : நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் \'ஒரு சிறு இசை\' என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. மேலும் பரிசுத்தொகையாக ரூ.1 லட்சமும் ஒரு பட்டயமும் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டன. 70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம், \'கல்யாண்ஜி\' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1962ல் இருந்து எழுதிவருகிறார். இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். மேலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக (கவிதைகள், சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம்) 1955 முதல் ஆண்டுதோறும் தமிழ் உட்பட 24 மொழிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது. தமிழ் மொழி பிரிவில் 1957, 1959, I960, 1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்தாண்டு தமிழ்மொழிக்கான விருதுக்கு சிறந்த சிறுகதைக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.

மூலக்கதை