6 மாத சிறை வாசத்திற்கு பின்பே சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு: பி.வி.ஆச்சார்யா கருத்து

தினகரன்  தினகரன்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் சசிகலாவுக்கு ஜாமின் வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலா பரோலில் மட்டுமே வெளிவர முடியும் என்று கூறியுள்ள அவர் 6 மாதம் சிறை வாசம் அனுபவித்த பின்னரே பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மோசமான உடல்நிலை காரணமாகவோ அல்லது உறவினர்கள் யாரும் மரணமடைந்தாலோ மட்டும் தான் சசிகலா வெளியில் வர அனுமதிக்கப்படுவார் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார். எனினும் அதை கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் சசிகலா சீறாய்வு மனு தாக்கல் செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்பதால் இதனை நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள் என்பது ஆச்சார்யாவின் கருத்து.

மூலக்கதை