முதலமைச்சரை விட கழுதைகள் எவ்வளவோ மேல். பாஜக ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
முதலமைச்சரை விட கழுதைகள் எவ்வளவோ மேல். பாஜக ...


உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.




இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குஜராத்தில் உள்ள காட்டு விலங்குகளை பிரபலப்படுத்தும் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, 'அமிதாப்பச்சன் போன்றவர்கள் குஜராத்தில் உள்ள கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம்' என்று கூறினார். இவர் மறைமுகமாக 'குஜராத் கழுதை' என்று பிரதமர் மோடியை தாக்குவதாகவே அர்த்தம் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதற்கு தற்போது பதிலடியை கொடுத்துள்ளது.

அகிலேஷின் இந்த கீழ்த்தரமான கருத்து ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள காட்டு விலங்குகளை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில்தான் அமிதாப் நடித்திருக்கிறார்.

அந்த விளம்பத்தில் காட்டு விலங்குகளே காண்பிக்கப்படுகின்றன. காட்டு விலங்குகளுக்கும், கழுதைகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாதவராக அகிலேஷ் இருப்பது வியப்பளிக்கிறது.

அதுதவிர, உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனுக்கு அகிலேஷ் யாதவ் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை என்று குஜராத் மாநில பாஜக தலைவர் ஜீது வஹானி கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஹர்ஷத் படேல் கூறியபோது, 'கழுதைகளைப் பற்றி பேசுவதற்கு அகிலேஷ் யாதவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஏனெனில், அகிலேஷை விட கழுதைகள் விசுவாசமானவை.

அவை தங்கள் முதலாளிகளுக்கு என்றும் துரோகம் செய்தது கிடையாது.

ஆனால், தன்னை உயர்த்திய தந்தைக்கே துரோகம் செய்தவர்தான் அகிலேஷ் யாதவ் என்று பதிலடி கொடுத்தார்.

.

மூலக்கதை