2018ஆம் ஆண்டு வரை ஜியோ இலவச சேவை: முகேஷ் அம்பானி

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
2018ஆம் ஆண்டு வரை ஜியோ இலவச சேவை: முகேஷ் அம்பானி

ஜியோவின் இலவச சேவை மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் தற்போது அந்நிறுவனம் ஜியோ பிரதம உறுப்பினர்களுக்கு மார்ச் 2018ஆம் ஆண்டு வரை இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 
  இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை அனைவரையும் வெகுவாக கவர்ந்து 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்து சென்று கொண்டிருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முடிவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் புத்தாண்டு சலுகை என்ற பெயரில் மார்ச் 31ஆம் தேதி இந்த சேவை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.   முதலில் 4GB டேட்டா வழங்கி வந்த ஜியோ நிறுவனம் புத்தாண்டுக்கு பிறகு 1GB ஆக குறைத்துக்கொண்டது. இந்நிலையில் தற்போது மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஜியோ நிறிவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் குரல் வழி சேவைகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     மேலும் பிரதம உறுப்பினர்களுக்கு மார்ச் மாதம் 2018ஆம் ஆண்டு வரை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரதம உறுப்பினர் பட்டியலில் சேர முதலில் ரூ. 99 செலுத்த வேண்டும். பின்னர் மாதம் சந்தா ரூ. 303 செலுத்த வேண்டும்.

இந்த பிரதம உறுப்பினர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஜியோவின் மற்ற அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும்.  

.

மூலக்கதை