புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

PARIS TAMIL  PARIS TAMIL
புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 122 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.

இதன் மூலம், தமிழகத்தில் ஒரு வார காலமாக நிலவி வந்த அசாதாரண சூழல் முடிவுக்கு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்றப் பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.15 மணிக்கு தலைமைச்செயலகம் செல்கிறார். இதையொட்டி, அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சில கோப்புகளில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை