சட்டபேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம்: வளாகத்தில் ஸ்டாலின் பேட்டி !

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டபேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம்: வளாகத்தில் ஸ்டாலின் பேட்டி !

சட்டபேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம் என்று சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும்  ஒத்தி வைக்கபட்டது.பின்னர் மீண்டும் கூடிய பொழுதும் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் மீண்டும் சபை மூன்று மணி வரைக்கும் ஒத்திவைக்கபப்ட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக்  கண்டித்து சட்டசபை வளாகத்தில் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலினபேசியதாவது:

இன்று சபை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம்., அதற்கு சபாநாயகர் இடம் தரவில்லை.  பின்னர் கூச்சல் குழப்பத்தின் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.  

பின்னர் நான் நேரடியாக சபாநாயகர் அறைக்கு சென்று தவறுகள் நடந்திருந்தால் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அவை ஒழுங்காக நடத்த வேண்டுகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் பின்னர்  அவை கூடிய  பொழுது தன்னுடைய சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்த சபாநாயகர் தனபால் அதற்கு எங்கள் மீதே குற்றம் சாட்டினார்.

அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது சபை மீண்டும் மூன்று மணி வரை ஒத்தி வைக்கபப்ட்டது. சபாநயகரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சட்டபேரவை வளாகத்தில்  நாங்கள் அறப்போராட்டடத்தில் ஈடுபட்டோம்.

ஆனால் திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். எங்களின் சட்டைகளை கிழிக்கப்பட்டது.

தன்னுடைய சட்டை பொத்தான்கள் கிழிக்கப்பட்ட நிலையில் பேட்டியளித்த ஸ்டாலின் ஆளுநர் மாளிகை நோக்கி புகார் கொடுக்க விரைந்தார். 

மூலக்கதை