சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்ட மூவரிடம் அபராதம் வசூலிப்பது எப்படி? சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்ட மூவரிடம் அபராதம் வசூலிப்பது எப்படி? சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் தகவல்


புதுடெல்லி- சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களிடம் விதிக்கப்பட்டுள்ள அபராதம் எவ்வாறு வசூலிக்கப்படும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை எவ்வாறு வசூலிக்கப்படும் என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தும், அவர்களது நிரந்தர டெபாசிட் கணக்குகளில் இருந்தும் அபராதத்திற்கு ஈடான தொகை பறிமுதல் செய்யப்படும்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையான ரூ. 10 கோடியை அதன் மூலம் பெற முடியாவிட்டால், நீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ள அவர்களின் தங்க, வைர நகைகளை ஏலத்தில் விடுவோம்.

அந்த பணத்தை கொண்டு அபராதம் ஈடு செய்யப்படும்.

இந்த நகைகளை ரிசர்வ் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கு விற்பனை செய்யவும் கோர்ட் தீர்மானிக்கலாம். அல்லது பொது ஏலத்தின் மூலமாக நகைகள் விற்பனை செய்யப்படலாம்.

மீதமுள்ள நகைகள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டு விடும். குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகள் மாநில அரசால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட அபராத தொகையில் இருந்து வழக்கு நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ. 5 கோடி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை