நாட்டில் உள்ள ராணுவ தலைமையகங்களை மாற்றியமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

தினகரன்  தினகரன்
நாட்டில் உள்ள ராணுவ தலைமையகங்களை மாற்றியமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டில் உள்ள ராணுவ தலைமையகங்களை மாற்றியமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளி்த்துள்ளார். மேலும் ராணுவம், விமானப்படை, கடற்படைக்கும் தன்னாட்சி கொண்ட ஒரே விஜிலென்ஸ் அமைப்பு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கண்காணிப்பு அமைப்பு அமைக்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் விஜிலென்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக முப்படைகளின் கர்னல் அந்தஸ்திலான 3 அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது: முப்படைகளுக்கும் ஒரே தளபதி விரைவில் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பிரதமர் அறிவித்துள்ளபடி நியமிக்கப்பட உள்ள முப்படை தலைமை தளபதி, தரைப்படை, கடற்படை, விமானப்படை தளபதிகளை விட மூத்த அதிகாரியாக இருப்பார். நாட்டின் பாதுகாப்பில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையை ஒருங்கிணைந்து செயல்பட வைப்பது இவரின் முக்கிய பணியாக இருக்கும். இவர் பிரதமருக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ராணுவ ஆலோசகராக இருப்பார். தற்போது முப்படை தளபதிகளின் தலைவராக விமானப் படை தலைவர் பி.எஸ்.தானோவ் உள்ளார். இந்தப் பதவிக்கு பதிலாகத்தான், முப்படை தலைமை தளபதி புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கார்கில் போரின் போது அரசிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 19 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்திய ராணுவத்துக்கு முப்படை தலைமை தளபதி நியமிக்கப்பட உள்ளார் என்று மோடி தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள ராணுவ தலைமையகங்களை மாற்றியமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

மூலக்கதை