ஆந்திர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்: துணை சபாநாயகர் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஆந்திர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: துணை சபாநாயகர் உத்தரவு

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ-க்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் அண்மையினில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. இதில் சத்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது இந்த இரு கட்சிகளும் எதிரும், புதிருமாக இருந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று அமளியில் ஈடுபட்டதாக கூறி தெலுங்கு தேச கட்சியின் அட்ச நாயுடு, கோரண்ட்லா புட்சையா சவுத்ரி, நிம்மலா ராம நாயுடு ஆகிய 3 எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திரநாத் பரிந்துரைப்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது. இன்று காலை, கேள்வி நேரத்தில் போது, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் வாக்குறுதிக்கு தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பிரச்சினை வந்தது. முன்னதாக, நிதியமைச்சர் புகனா ராஜேந்திரநாத் ரெட்டி, சபையின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்த காரணத்தினால் தெலுங்கு தேச கட்சி  எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். அதன் காரணமாக அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ-க்கள், பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவைக்கு இடையூறாக இருந்ததன் காரணமாக 3 பேரையும் இடைநேரம் செய்வதாக ஆந்திர துணை சபாநாயகர் கோனா ரகுபதி தெரிவித்தார். மேலும் அவர்கள் மூவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் இனி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை