அமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு

பீஜிங் : 'அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக சீனா போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும்' என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.


சீனாவின் முரண்பாடான ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறிய அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீனாவும் உயர்த்தியது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக உலக வங்கி கவலை தெரிவித்தது.


இந்தியாவுக்கான புதிய துாதராக நியமிக்கப்பட்டுள்ள சீனாவின் சங் வெய்டோங் கூறியாவது : வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து ஆரோக்கியான உறவை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. சமீபகாலமாக இந்தியாவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.


அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான சந்தர்ப்பவாதமான வர்த்தக கொள்கைகளால் சீனா மட்டுமல்லாமல் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.


மூலக்கதை