இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக புதிய புதிய விதிகள் வர்த்தகத்தை பாதிக்கும் : வால்மார்ட்

தினகரன்  தினகரன்
இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக புதிய புதிய விதிகள் வர்த்தகத்தை பாதிக்கும் : வால்மார்ட்

இந்தியா: இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக புதிய விதிகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பிடம் வால்மார்ட் நிறுவனம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுவணிகர்களுக்கு ஏற்பவும் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டும் ஆன்லைன் வர்த்தக விதிகளை மத்திய அரசு வகுத்தது. இந்நிலையில்  இந்தியாவின் புதிய விதிகள் வர்த்தகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் எனக்கூறி , வால்மார்ட் நிறுவனம் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறி ஆவணம் ஒன்று வெளியானது. இந்தியா வகுத்துள்ள புதிய விதிகளை பின்பற்ற 6 மாத  அவகாசம் தேவையிருப்பதாகவும் வால்மார்ட் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வால்மார்ட் நிறுவனம், அது பழைய கோரிக்கை என்றும் அதில் பலவற்றுக்கு தீர்வு கண்டுவிட்டதாகவும்  கூறியுள்ளது.

மூலக்கதை