பஞ்சாபில் அமிர்தஸரஸ் அருகே குண்டு வெடிப்பு : 3 பேர் பலி

தினகரன்  தினகரன்
பஞ்சாபில் அமிர்தஸரஸ் அருகே குண்டு வெடிப்பு : 3 பேர் பலி

பஞ்சாப்: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாநிலத்தில் இன்று நடந்த மத நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாநிலத்துக்கு உட்பட்ட அதிவாலா கிராமத்தில் இருக்கும் நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த வழிபாட்டுதலத்தில்  1000க்கும் அதிகமான பக்தர்கள் வழிபட வருவதாகவும் சம்பவம் நடந்த நேரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். வீசப்பட்ட அந்த வெடிகுண்டுகள் விழ்ந்ததும் வெடித்துச் சிதறின. மூத்த காவல்துறை அதிகாரி சுரேந்தர் பால் சிங்க் பார்மர், 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலை கூறியுள்ளார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முகத்தை மறைத்தபடி பைக்கில் சென்ற இருவர் குண்டு வீசி சென்றதாக கூறியுள்ளனர். மர்ம நபர்கள் யார், ஏன் குண்டு வீசினர் என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மூலக்கதை