ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜைனாப்போரா பகுதியை அடுத்துள்ள ரெப்பான் என்னுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த நவாஸ் வாகேய், மற்றவர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த யாவார் வானி இருவருமே அல்-பதர் என்னும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மூலக்கதை