சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவர் கே.பி. சசிகலா கைது : கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்

தினகரன்  தினகரன்
சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவர் கே.பி. சசிகலா கைது : கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்

திருவன்ந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவர் கே.பி. சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சபரிமலை கர்மசமிதி என்ற இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கேரளாவின் பெரம்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நேற்று இருமுடிகட்டிக் கொண்டு சபரிமலை சென்ற இந்து ஐக்கிய சபையின் மாநில தலைவர் கே.பி.சசிகலா ஒரு செயற்பாட்டாளர் என்பது போலீசாரின் புகார் ஆகும். பாரதிய ஜனதா ஆதரவாளரும் 50 வயதை தாண்டியவருமான கே.பி.சசிகலாவை போலீசார் சபரிமலைக்குள் அனுமதிக்கவில்லை. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் தடையை மீறி சென்ற கே.பி.சசிகலா கைது செய்யப்பட்டார். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தற்போதைய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பால் கன்னியாகுமரியில் இருந்து செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை பிரவேசம் நடந்த நேற்று கேரளா சென்ற பிரபல பெண்ணியம் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அவர் நீதிமன்றத்தின் உதவியை நாட உள்ளார்.

மூலக்கதை