ஆந்திரா, மேற்குவங்கத்தில் சிபிஐ சோதனைக்கு தடை... மாநில அரசின் அனுமதி பெற்று தான் இனி சோதனை

தினகரன்  தினகரன்
ஆந்திரா, மேற்குவங்கத்தில் சிபிஐ சோதனைக்கு தடை... மாநில அரசின் அனுமதி பெற்று தான் இனி சோதனை

டெல்லி: ஆந்திரா மற்றும் மேற்குவங்க அரசுகள் தங்கள் மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்ய வழங்கப்பட்டு இருந்த ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளனர். இதனையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் இனி அந்தந்த அரசுகளின் முன் அனுமதி பெற்று தான் எந்த ஒரு குற்றச்சாட்டின் பேரிலும், சோதனைகள் மற்றும் விசாரணை நடத்த வேண்டிய நிலை மத்திய அரசு அமைப்பான சிபிஐ-க்கு ஏற்பட்டுள்ளது. சிபிஐ நிர்வாக அதிகாரிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் போக்கே இந்த முடிவுக்கு காரணம் என ஆந்திர அமைச்சர் சின்னராஜாப்பா தெரிவித்துள்ளார். சிபிஐ அதிகாரிகளை தனது சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் மத்திய அரசு பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். ஊழல் கட்சிகளின் அச்சமே சிபிஐ சோதனைகளுக்கு தடை விதிக்க காரணம் என பாஜக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை