ஏழுமலையானுக்கு பயன்படுத்த 300 ஆண்டுக்கு சந்தனம் ஸ்டாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏழுமலையானுக்கு பயன்படுத்த 300 ஆண்டுக்கு சந்தனம் ஸ்டாக்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை சார்பில் திருமலையில் அமைக்கப்பட்டுள்ள சந்தனமர தோட்டம் மற்றும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு  வரும் `பசுமை வனம்’’ பணிகளை தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை சார்பில் 100 ஹெக்டரில் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.



இதற்காக 2013ம் ஆண்டு மத்திய அரசு ₹76  லட்சம் நிதி வழங்கியது.

தேவஸ்தான நிர்வாகமும் ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது தேவஸ்தானத்தில் உள்ள  சந்தன மரங்கள் மற்றும் 100 ஹெக்டர் பரப்பளவில் வைக்கப்பட்டுள்ள சந்தன மரங்கள் மூலமாக ஏழுமலையான் கோயிலுக்கும் அதனை சார்ந்த தேவஸ்தான  கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பூஜைக்கும் 300 ஆண்டுகளுக்கு தேவையான சந்தனம் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை