ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் மும்பை பயணிகள் 280 பேர் தாய்லாந்து ஏர்போர்ட்டில் தவிப்பு: பைலட் தட்டுப்பாடு காரணம்

தினகரன்  தினகரன்
ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் மும்பை பயணிகள் 280 பேர் தாய்லாந்து ஏர்போர்ட்டில் தவிப்பு: பைலட் தட்டுப்பாடு காரணம்

மும்பை: மும்பை புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் அதில் பயணம் செய்யவிருந்த 280க்கும் மேற்பட்ட மும்பை பயணிகள் பாங்காக் விமான நிலையத்தில் 12 மணி நேரத்துக்கும் மேல் சிக்கித் தவித்தனர். பயணிகளில் பலர் கடந்த திங்கட்கிழமை மும்பையில் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருந்தனர். ஆனால் மாற்று விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து திங்கட்கிழமை இரவு 8 மணிக்குதான் புறப்பட்டனர். மும்பைக்கு இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். ஏர் இந்தியா நிறுவனம் மீது வழக்கு தொடரப்போவதாக சில பயணிகள் கூறினர். எஸ்.மகாதேவேன் என்ற பயணி கூறும்போது, “ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பாங்காக்கில் இருந்து அந்த விமானம் புறப்படவிருந்தது. மாலை 5 மணிக்கே விமான நிலையம் வந்து விட்டேன். விமானம் ரத்து செய்யப்பட்டதால் அங்கேயே சிக்கிக் கொண்டேன். விமான நிறுவனம் எங்களுக்கு உணவுக்குக் கூட ஏற்பாடு ெசய்யவில்லை. விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில்தான் வாங்கி சாப்பிட்டோம்” என்றார். விமான நிலையத்தில் 12 மணி நேரமாக காத்திருந்தும் ஏர் இந்தியா நிறுவனம் எந்த ஏற்பாடும் செய்யாததால் முதியவர்களும் குழந்தைகளும் விமான நிலையத்தில் படுத்து உறங்கியதாக மும்பை பிரபாதேவியை சேர்ந்த வழக்கறிஞர் சுஜ்ஜெய்ன் தல்வார் கூறினார். இவரும் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை