நக்சல்கள் தாக்குதல், மிரட்டல்களை மீறி சட்டீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் துவங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
நக்சல்கள் தாக்குதல், மிரட்டல்களை மீறி சட்டீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் துவங்கியது

ராய்ப்பூர்: நக்சல்கள் தாக்குதல், மிரட்டல்களை ெதாடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கிய நிலையில், குறிப்பிட்ட சில  இடங்களில் வாக்காளர்கள் மீது தாக்குதல் நடந்தது. பாஜ முதல்வர் ரமண்சிங்கின் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலைெயாட்டி, மொத்தமுள்ள 80 தொகுதிகளில், நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த 8 மாவட்டங்களுக்குட்பட்ட 18 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு  முதல்கட்ட வாக்குப் பதிவு துவங்கியது. ‘தேர்தலை புறக்கணிக்க வேண்டும்’ என்று நக்சலைட் அமைப்பினர் மக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், கடந்த 15 நாட்களில் நக்சல்கள்  நடத்திய 3 தாக்குதலில், தூர்தர்ஷன் கேமராமேன் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நக்சல்களின் மிரட்டல் காரணமாக, 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 3 மணிக்கு முடிவடையும்.

மற்ற 8 தொகுதிகளில் காலை 8 மணி  முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக, ஒரு லட்சம் போலீசார் வரை பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஆளும் பாஜ முதல்வர் ரமண் சிங் (ராஜ்நந்த்கான் ெதாகுதி) உட்பட 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 31 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முதல்வர் ரமண்சிங் தொகுதியில், காலை முதலே விறுவிறு வாக்குப்பதிவு நடந்தது.
இதுகுறித்து, மாநில காவல் துறை சிறப்பு இயக்குனர் (நக்சல் தடுப்பு நடவடிக்கை பிரிவு) டி. எம். அவஸ்தி கூறுைகயில், “முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய,  மத்திய துணை ராணுவப் படையினர் உட்பட மொத்தம் 1 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவை சீர்குலைக்கும் முயற்சியாக, இன்று  அதிகாலை 5. 30 மணியளவில் டுமாக்பால் - நாயானர் சாலையில் வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்தன. அவை முறியடிக்கப்பட்டன.

வாக்காளர்கள் தங்களது 183வது  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது’’ என்றார்.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறுகையில், ‘‘பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த நக்சல்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைப்பதற்காக விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு, 900  தேர்தல் அலுவலர்கள் அனுப்பப்பட்டனர்.

மொத்தமாக, 16,500 வாக்குச்சாவடி மற்றும் தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக, நேற்று நக்சல்கள் தாக்குதல் நடத்தியது குறித்து, சட்டீஸ்கர் மாநில காவல் துறை ஐஜி (ராய்ப்பூர் சரகம்) திபான்ஷூ கப்ரா கூறுகையில், “கான்கர் மாவட்டத்தில் எல்லை  பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர் மகேந்திர சிங், நக்சல்களின் தாக்குதலில் உயிரிழந்தார். பீஜப்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டார்” என்றார்.



இந்நிலையில், சங்வாரி பகுதியில், கமலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால், சில மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.   பின்னர், இயந்திரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல், மேலும் சில இடங்களில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, பின்னர் அவை சரிசெய்யப்பட்டு  வாக்குப்பதிவு நடந்தது.

இன்று 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதம் உள்ள 72 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 5 மாநில  தேர்தல்கள் நடத்தப்பட்டு, மொத்தமாக டிசம்பர், 11ம் தேதி வாக்கு எண்ணக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை