ஆந்திராவில் ரூ.50 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கைது

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் ரூ.50 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் ரூ.50 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக உள்ள வெங்கட்ராவ் அலுவலகம், வீடு, உறவினர்கள் வீடு மற்றும் டிரைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், 3 கிலோ எடை உள்ள தங்க நகைகள், 10 கிலோ எடை உள்ள வெள்ளி நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ் உறவினர் பெண் மூலம் 2 சூட்கேஸ்கள் மெக்கானிக் ஸ்ரீனிவாசராவ் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு சூட்கேஸ்களை கைப்பற்றி திறந்து பார்த்த போது ரூ.15 லட்சம் பணம், இரண்டே கால் கிலோ மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் உதவி வாகன ஆய்வாளர் வெங்கட்ராவ், டிரைவர் மோஹன்ராவ், மெக்கானிக் ஆகிய 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.     

மூலக்கதை