டெல்லியில் நரேந்திர மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முக்கிய பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
டெல்லியில் நரேந்திர மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முக்கிய பேச்சுவார்த்தை

புதுடெல்லி : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மூன்று நாள் சுற்றுப்யணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை ரணில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாப்னா நகரில் இந்தியா சார்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள், தமிழர்களை மறுகுடியமர்த்தல், அதிகார பகிர்வு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், இந்தியாவின் மனதில் இலங்கைக்கு சிறப்பான இடம் உண்டு என்றும், பிரதமர் மோடி-ரணில் விக்ரமசிங்கே சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்தார். இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களும் சந்தித்திருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது.

மூலக்கதை