சபரிமலையில் பெண்களுக்கு என்னென்ன வசதிகள்: ஐகோர்ட்டில் அறிக்ைக தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் பெண்களுக்கு என்னென்ன வசதிகள்: ஐகோர்ட்டில் அறிக்ைக தாக்கல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு செய்யப்பட்டு வரும் வசதிகள் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவஸம் போர்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி உள்ளது. இதற்கிடையே  வரும் ஐப்பசி மாத பூஜைகளுக்காக 17ம் ேததி நடை திறக்கப்படுகிறது.

ஆகவே அன்று மாலை பெண்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தேவஸம் போர்டு சார்பில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பம்பையிலும், சன்னிதானத்திலும் பெண்கள் ஓய்வு எடுக்க தனியாக இடம் ஒதுக்கப்படும்.

சன்னிதானத்தில் 100க்கும் மேற்பட்ட பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்படும். இதை தெரிந்து கொள்ள ‘பிங்க்’ நிற பெயின்ட் அடிக்கப்படும்.

நிலைக்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 500 கழிப்பறை உள்பட 900 கழிப்பறைகளில் பெண்களுக்கென்று 100 ஒதுக்கப்படும். இதேபோல் பம்பையிலும் 100 கழிப்பறைகள் கட்டப்படும்.

பெண்களுக்கு உடைமாற்ற வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை