திருப்பதி அருகே செம்மரம் வெட்டுவதற்காக வனத்திற்குள் செல்ல முயன்ற கும்பல்: போலீசார் துப்பாக்கிச்சூடு

தினகரன்  தினகரன்
திருப்பதி அருகே செம்மரம் வெட்டுவதற்காக வனத்திற்குள் செல்ல முயன்ற கும்பல்: போலீசார் துப்பாக்கிச்சூடு

திருப்பதி: திருப்பதி அருகே செம்மரம் வெட்டுவதற்காக வனத்திற்குள் செல்ல முயன்ற கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அனைவரும் தப்பி சென்றுள்ளனர். ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர போலீஸ், செம்மரம் வெட்ட காட்டுக்குள் செல்ல முயன்ற கும்பலை பிடிக்க முயன்றனர். குறைந்த அளவில் போலீசார் இருந்ததால் அந்த கும்பல் வனத்துறையினரை தாக்க முயன்றதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால் அவர்கள் காட்டுக்குள் தப்பி சென்ற நிலையில் திருவள்ளூரை சேர்ந்த சிக்கி கொண்டார். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தப்பிச்சென்றவர்கள் விட்டுச்சென்ற அரிவாள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் போல் செம்மரம் வெட்ட வருவதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை