மே.வங்க சீருடைப்பணியாளர் தேர்வில் முறைகேடு: ‘பிட்’ அடித்த 43 தேர்வர்கள் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மே.வங்க சீருடைப்பணியாளர் தேர்வில் முறைகேடு: ‘பிட்’ அடித்த 43 தேர்வர்கள் கைது

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு செயல்களில் ஈடுபட்ட 43 ேபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேற்குவங்க மாநில சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவலர் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.

மாநிலம் முழுவதும், 5,702 காவலர் காலிப்பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், 10 லட்சத்துக்கும் ேமற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கடந்த 8ம் தேதி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ேமலும், ஹால் டிக்கெட் பெறாதவர்களுக்காக சம்பந்தப்பட்ட தேர்வரின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் விபரங்கள் அனுப்பப்பட்டு, ஹால் டிக்கெட் நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது.

தேர்வர்கள், தேர்வு அறைக்குள் செல்போன், புளூடூத், கால்குலேட்டர் போன்ற நவீன எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் நடந்த தேர்வின் போது, மாநில போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன.

ஆனால், செல்போன், புளூடூத் போன்ற சில உபகரணங்களை பயன்படுத்தி சிலர் முறைகேடு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 43 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து, சிஐடி போலீஸ் அதிகாரி நிஷாத் பர்வேஸ் கூறுகையில், ‘சீருடைப்பணியாளர் தேர்வில் முறைகேடு செய்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்தி, முறைகேடான முறையில் தேர்வை எழுதி சிக்கிக் கொண்டனர்.

வினாத்தாள் குறித்த விவரங்கள் லீக் ஆனதா அல்லது காவல்துறையை சேர்ந்த சிலரின் உதவியில், இவர்கள் தேர்வை எதிர்கொண்டனரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

.

மூலக்கதை