காஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
காஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

 

காஷ்மீரில் 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். இதனால் காஷமீரில்  பதட்டம் நிலவுகிறது.   காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வந்த போதிலும் தீவிரவாதிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. தற்போது போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.  போலீஸ் துறையில் பணியாற்றுவோர் ராஜினாமா செய்ய வேண்டும் என சில நாட்களாக தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.  ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதியான ரியாஸ் நாய்கோ உள்ளூர் போலீசார், குறிப்பாக சிறப்பு காவல் படை அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்களை எச்சரித்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.  கடந்த 30ம் தேதி போலீஸ் துறையில் பணியாற்றி வருவோரின் குடும்பங்களை சேர்ந்த 8  பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.   இந்த கடத்தல் சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் நாய்கோ  பொறுப்பேற்று 12 நிமிட வீடியோவை வெளியிட்டு இருந்தான்.  இந்த நிலையில் காஷ்மீரில்,  சோபியான் மாவட்டத்தை சேர்ந்த கப்ரான், ஹிபோரா கிராமங்களைச் சேர்ந்த 2 போலீசாரை  தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதேபோல், படாகந்த் கிராமத்தில் ஒரு போலீசை தீவிரவாதிகள் வாகனத்தில் கடத்தினர். அப்போது, கிராம மக்கள் அவர்களை விரட்டிச் சென்று கடத்தப்பட்டவரை விடுவிக்கும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. வானத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை மிரட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். ஆற்றைக் கடந்த அவர்கள் தாங்கள் கடத்திய 3 போலீசாரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.  இந்நிலையில், கொல்லப்பட்ட 3 போலீசாரின் சடலங்களும் கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.  கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக வீட்டில் இருந்து போலீசாரை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.

காஷ்மீரில் 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். இதனால் காஷமீரில்  பதட்டம் நிலவுகிறது. 


 காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வந்த போதிலும் தீவிரவாதிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. தற்போது போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். 


போலீஸ் துறையில் பணியாற்றுவோர் ராஜினாமா செய்ய வேண்டும் என சில நாட்களாக தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.  ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதியான ரியாஸ் நாய்கோ உள்ளூர் போலீசார், குறிப்பாக சிறப்பு காவல் படை அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்களை எச்சரித்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.  கடந்த 30ம் தேதி போலீஸ் துறையில் பணியாற்றி வருவோரின் குடும்பங்களை சேர்ந்த 8  பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  


இந்த கடத்தல் சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் நாய்கோ  பொறுப்பேற்று 12 நிமிட வீடியோவை வெளியிட்டு இருந்தான். 


இந்த நிலையில் காஷ்மீரில்,  சோபியான் மாவட்டத்தை சேர்ந்த கப்ரான், ஹிபோரா கிராமங்களைச் சேர்ந்த 2 போலீசாரை  தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதேபோல், படாகந்த் கிராமத்தில் ஒரு போலீசை தீவிரவாதிகள் வாகனத்தில் கடத்தினர். அப்போது, கிராம மக்கள் அவர்களை விரட்டிச் சென்று கடத்தப்பட்டவரை விடுவிக்கும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை.


வானத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை மிரட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். ஆற்றைக் கடந்த அவர்கள் தாங்கள் கடத்திய 3 போலீசாரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். 
இந்நிலையில், கொல்லப்பட்ட 3 போலீசாரின் சடலங்களும் கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. 


கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக வீட்டில் இருந்து போலீசாரை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.

 

மூலக்கதை