கன்னியாஸ்திரி பாலியல் புகார்: பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ தாற்காலிகமாக நீக்கம்

தினகரன்  தினகரன்
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ தாற்காலிகமாக நீக்கம்

திருவனந்தபுரம்: ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோவை தாற்காலிகமாக போப் நீக்கியுள்ளார். பிராங்கோ மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் கூறியதால் நடவடிக்கை மேற்கொண்டார். கத்தோலிக்க திருச்சபையும் ஒருநபர் கமிட்டி அமைத்து விசாரணை நடத்துகிறது. பாலியல் புகார் குறித்து கேரளா போலீஸ், பிராங்கோவிடம் விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார். கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது.

மூலக்கதை