'ஹவாலா' வழக்கில் கர்நாடக அமைச்சர்

தினமலர்  தினமலர்
ஹவாலா வழக்கில் கர்நாடக அமைச்சர்

பெங்களூரு : கர்நாடகாவில் நடந்த, 'ஹவாலா' பண பரிமாற்றம் தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்தவரும், அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சருமான, சிவகுமார் உட்பட ஐந்து பேருக்கு எதிராக, அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, நீர்ப்பாசனதுறை அமைச்சர், சிவகுமார் உட்பட, அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில், கடந்தாண்டு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், டில்லியிலுள்ள, சிவகுமார் வீட்டில், 8.60 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இது தொடர்பான புகாரில் சிக்கியவர்கள், வருமான வரித் துறை விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.

இந்நிலையில், சிவகுமார் உட்பட ஐந்து பேருக்கு எதிராக, டில்லியில் அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெருங்கிய ஆதரவாளர்களுடன் இணைந்து, பெங்களூரில், சிவகுமார், ஹவாலா பண பரிமாற்றம் செய்து உள்ளதாக, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அவரது வாக்குமூலத்தை பெறுவதற்கு, அமலாக்க பிரிவு தயாராகி வருகிறது.

மூலக்கதை