பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

PARIS TAMIL  PARIS TAMIL
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில் மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இதன் விளைவு பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி வரும் நிலையில், இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 10 காசுகள் உயர்ந்து ரூ.85.41 ஆகவும் டீசல் 10 காசுகள் உயர்ந்து 78.10 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

மூலக்கதை