பெண் கைதிகளின் குழந்தைகளுக்கு கருணை

தினமலர்  தினமலர்
பெண் கைதிகளின் குழந்தைகளுக்கு கருணை

புதுடில்லி: ''சிறையில் உள்ள தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை, தன் தாயை, வாரத்துக்கு மூன்று முறையாவது, சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, மத்திய அமைச்சர், மேனகா கூறினார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிறையில் பிறக்கும் குழந்தையை, 5 வயது வரை வளர்க்க, தாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், தாயிடமிருந்து, அந்த குழந்தை பிரிக்கப்படுகிறது. இதனால், அந்த குழந்தைக்கு, தாயுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் பெண்களுக்கு, தங்கள் குழந்தை எங்கே உள்ளது என்பது கூட தெரிவதில்லை. தாயிடம் இருந்து பிரிக்கப்படும் குழந்தை, காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது. காப்பகத்துக்கும், சிறைக்கும், தொடர்பு இல்லை. இதனால், தங்கள் குழந்தையை பற்றிய விபரம், தாய்க்கு தெரியாமல் போய்விடுகிறது. இதை தடுக்க, சிறையில் உள்ள தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை, வாரம் மூன்று முறை, தாயை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மேனகா கூறினார்.

மூலக்கதை