இந்தியா முழுவதும் என்.ஆர்.சி.: அசாம் முதல்வர் சோனோவால்

தினமலர்  தினமலர்
இந்தியா முழுவதும் என்.ஆர்.சி.: அசாம் முதல்வர் சோனோவால்

கவுகாத்தி : அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பட்டியல் போன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியிட வேண்டும் என அசாம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

வட கிழக்கு மாநிலமான அசாமில் தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர்.

இந்த 40 லட்சம் பேரும் அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கூறியது, தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாம் உண்மையான இந்தியர்கள் யார் என்பதும், அந்நிய நாட்டவர் யார் என்பதும் தெரியவரும் என்றார்.

மூலக்கதை